என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆன்லைன் தேர்வு"
- மாநில அளவில் வெற்றி பெறுவோர் ஆண்டுதோறும் வெளிநாடு கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.
- வினாத்தாள் தயாரித்தல், எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றும் முறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
அரசுப்பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடவாரியாக தேர்வு நடத்தி மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திலும் 'அப்ஜெக்டிவ்' வகை கேள்விகள் தயாரித்து எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
தேர்வு முடிந்ததும் தவறான கேள்விகளுக்கான விடை உடனே திரையில் தோன்றும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அவர்களுக்கான எமிஸ் பக்கத்தில் பதிவாகும். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வட்டார, மாவட்ட அளவிலான தேர்வுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். மாநில அளவில் வெற்றி பெறுவோர் ஆண்டுதோறும் வெளிநாடு கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். இக்கல்வியாண்டு துவங்கி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் தற்போது ஆன்லைன் தேர்வுகள் நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.
வினாத்தாள் தயாரித்தல், எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றும் முறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் முதற்கட்ட தேர்வை அனைத்து பள்ளிகளிலும் நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலை ப்பள்ளிகளில் உள்ள ஹைடெக் ஆய்வகத்தில் இத்தேர்வு நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யுமாறு தலைமை யாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தினசரி வகுப்பில் சொல்லி தர வேண்டிய செயல்பாடுகள் அட்டவணைப்படுத்தப்படும்.
- அதிக மாணவர்கள் படிப்பதால் 10 பேருக்கு ஒரு டேப் வீதம், பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.
திருப்பூர்:
எண்ணும் எழுத்தும் திட்டத்தை, ஐந்தாம் வகுப்பு வரை விரிவுப்படுத்துவதால் ஆன்லைன் தேர்வு நடைமுறைகளுக்கு டேப்லெட் வழங்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொரோனாவுக்கு பின் மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளி குறைக்க கடந்த ஆண்டு மூன்றாம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.இத்திட்டத்தில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், 10 சதவீதம் மட்டுமே கையாளப்படுகிறது. மீதமுள்ள 90 சதவீதத்திற்கு எண்ணும் எழுத்தும் திட்ட, பயிற்சி கையேடு மட்டுமே சொல்லி தரப்படும். தினசரி வகுப்பில் சொல்லி தர வேண்டிய செயல்பாடுகள் அட்டவணைப்படுத்தப்படும்.
இத்திட்டத்தை சிறப்பாக தொடர மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப டேப்லெட் கம்ப்யூட்டர் வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. எண்ணும் எழுத்தும் திட்ட முதன்மை கருத்தாளர்கள் கூறுகையில், எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு வாரம் ஒருநாள் எழுத்துத்தேர்வு நடத்த வேண்டும். ஆன்லைன் தேர்வாக நடத்தி இயக்குனரகத்தில் இருந்து மாணவர்களின் கற்றல் திறன் மதிப்பிடப்படுகிறது.
இதை ஆசிரியர்களின் மொபைல் போன் வழியாக மேற்கொள்ள சிரமமாக உள்ளது.5-ம் வகுப்பு வரை, விரிவுப்படுத்தப்பட்ட நிலையில் அதிக மாணவர்கள் படிப்பதால் 10 பேருக்கு ஒரு டேப் வீதம், பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். அடுத்த கல்வியாண்டில் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவதால் டேப் வழங்க ஆவண செய்ய வேண்டும் என்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆன்-லைன் வகுப்புகள் நடந்து வந்தன. இதனால் தேர்வுகளும் ஆன்-லைன் மூலம் மாணவ-மாணவிகள் எழுதி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து விட்டதால் தமிழகம் முழுவதிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.
மதுரை மாவட்டத்திலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவ-மாணவிகள் நேரடியாக பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் செமஸ்டர் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு நேரடியாக வந்து தேர்வு எழுத வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இன்று தேர்வு தொடங்கும் நிலையில் தனியார் கல்லூரியின் இந்த அறிவிப்புக்கு மாணவ-மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த கல்லூரியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இன்று காலை மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் ஆன்-லைன் வாயிலாக தேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவ-மாணவிகளின் தர்ணா போராட்டம் காரணமாக அங்கு ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) மனுநீதி நாள் என்பதால் மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுப்பதற்காக ஏராளமானோர் வந்திருந்தனர்.
இந்த நிலையில் மாணவ-மாணவிகளின் முற்றுகை போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முழுவதும் கூட்ட நெரிசலாக காணப்பட்டது.
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மாணவ-மாணவிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் இன்று நடப்பதாக வெளியிடப்பட்ட செமஸ்டர் தேர்வு அட்டவணைகள் 2 வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேரம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நிலவி வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் எழுத்து தேர்வுகளை ஒரு வருடத்துக்கு 50 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
அரசு துறைகளில் உள்ள 30-க்கும் அதிகமான பிரிவுகளுக்கு இந்த துறை மூலம்தான் தேர்வு நடத்தப்படுகிறது.
டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்படும் தேர்வுகளின் முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, ஆன்-லைன் மூலம் தேர்வுகளை நடத்த இப்போது அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக விருப்பமுள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளிகள் (டெண்டர்) கோரப்பட்டுள்ளன.
மாறி வரும் காலத்துக்கு ஏற்ப புதிய நடைமுறையை புகுத்துவது அவசியம் என்றும், பழைய காலம் போல் பேப்பரில் பரீட்சை எழுதி அதை திருத்தி முடிவுகளை அறிவிக்க கால விரயம் ஏற்படுவதால் இந்த புதிய நடைமுறையை செயல்படுத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் பரீட்சை எழுத விரும்புபவர்கள் குறிப்பிட்ட மையத்துக்கு சென்று கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில்தான் பதில்களை அனுப்ப வேண்டும்.
இதுபற்றி சட்டசபையில் உறுப்பினர்கள் பேசும் போது, “தனியாரிடம் இதை ஒப்படைத்தால் நிறைய தவறுகள் நடக்கும். வினாத்தாள் வெளியாக வாய்ப்பு ஏற்பட்டு விடும். எனவே நன்மைகளை விட அதிக தீமைகள்தான் ஏற்படும்” என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத பயிற்சி கொடுக்கும் ஆசிரியர் நடராஜன் கூறியதாவது:-
அரசுத் துறையில் வேலையில் சேருவதற்கு பட்டப்படிப்பு படித்திருந்தாலே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதலாம். தற்போது இதை ஆன்-லைனில் தேர்வு எழுத சொல்லும்போது கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
ஏனென்றால் நிறைய மாணவர்களுக்கு கம்ப்யூட்டரை சரளமாக பயன்படுத்த தெரியாது. இதனால் தடுமாற்றம் அடைவார்கள்.
அதுமட்டுமல்ல. கடந்த 2015-ம் ஆண்டு பரீட்சார்த்த முறையில் உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் தேர்வு எழுத 2 ஆயிரம் பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ‘சர்வர்’ முடங்கியதால் இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.
மேலும் வினாத்தாள் வெளியாக அதிக வாய்ப்பும் உருவாகும். ஏனென்றால் போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள்களை தயாரித்து வழங்குவது மட்டும்தான் தேர்வாணையத்தின் பணி என்றும் அதை கணினியில் ஏற்றி தேர்வை நடத்துவது வரை அனைத்தும் தேர்வு நடத்துவதற்கான தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனத்தின் பொறுப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.
தேர்வு அறையின் மேற்பார்வையாளர் கூட தனியார் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவராகத்தான் இருப்பார். தேர்வாணையத்தில் உள்ள பார்வையாளர் ஒருவர் மட்டுமே இருப்பார் என தெரிகிறது. எனவே இத்தகைய சூழலில் கண்டிப்பாக முறைகேடுகள் நடைபெறும்.
முக்கியமாக வினாத்தாள்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்வது மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த பணியை செய்வதற்கு 1 நாளைக்கு முன்பே தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும்போது வினாத்தாள் கசிய அதிக வாய்ப்புள்ளது.
பல மாநிலங்களில் ஆன்-லைன் தேர்வுக்கான வினாத்தாள் இப்படித்தான் கசிந்தன.
எனவே தேர்வு நடத்தும் பணியை தனியாரிடம் வழங்காமல் அரசு பணியாளர் தேர்வாணையமே இதற்கான கட்டமைப்பை உருவாக்கினால் தவறுகள் நடப்பதை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார். #TNPSC
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்